இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பால் சுமார் 200 புகையிரத சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
இன்று 80 ரயில் சேவைகள் மாத்திரமே முன்னெடுக்கப்படுவதாக இலங்கை ரயில்வேயின் பொது முகாமையாளரான தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் நள்ளிரவு முதல் 24 மணித்தியால அடையாள பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளது.
முன்னறிவிப்பின்றி பல நீண்ட தூர ரயில் பயணங்களை இரத்து செய்யும் இலங்கை ரயில்வே நிர்வாகத்தின் தீர்மானத்துக்கு எதிராக இந்த வேலை நிறுத்தம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சங்கம் அறிவித்துள்ளது.
—————
Reported by : Sisil.L