ரயில் கட்டணத்தை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்க ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
புதிய கட்டண திருத்தத்தின்படி மூன்றாம் வகுப்புக்கான குறைந்தபட்ச ரயில் கட்டணம் ரூ.20 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் மேடை டிக்கெட் கட்டணம் ரூ. 20 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
புதிய ரயில் கட்டணங்கள் திருத்தப்பட்ட பஸ் கட்டணத்தில் பாதியாக இருக்கும் என்றும் ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
கட்டணத் திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளதுடன், பயணிகள் போக்குவரத்து மற்றும் சரக்கு போக்குவரத்துக்கான ரயில் கட்டணங்களும் திருத்தப்பட்டுள்ளன.
புதிய கட்டணங்கள் நாளை (ஜூலை 22) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரவுள்ளன.
————
Reported by :Maria.S