சிறைவாசம் அனுபவித்து வரும் ரஞ்சன் ராமநாயக்க நாளை (26) அல்லது 29 ஆம் திகதி திங்கட்கிழமை விடுதலை செய்யப்படுவார் என எதிர்பார்ப்பதாக சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ட்விட்டர் பதிவொன்றை விடுத்துள்ள அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்யுமாறு அவரும் பல தரப்பினரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ரஞ்சன் ராமநாயக்கவை விடுவிப்பதற்கான செயற்பாடுகளில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட மின்சக்தி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஸவிற்கு நன்றி தெரிவிப்பதாகவும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
Reported by :Maria.S