யாழ்.மாவட்டம் எம்.பி.ஆசனம் ஒன்றை இழந்தது

2020ஆம் ஆண்டு வாக்காளர் பதிவுப் பட்டியலின்  படி யாழ்ப்பாணம் மாவட்டம் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ஆசனத்தை இழந்துள்ளது  எனத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கமைய யாழ்.மாவட்டத்தில் தெரிவு செய்யப்படும் நாடாளு
மன்ற ஆசனங்கள் ஆறாகக் குறைவடைந்துள்ளன.இதனிடையே கம்பஹா மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நாடாளுமன்ற ஆசனங்களின்  எண்ணிக்கை ஒன்றால் அதிகரித்துள்ளது.

இதற்கமைய கம்பஹா மாவட்டத்தின் புதிய நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை 18 இலிருந்து 19 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

கடந்த 2010ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் யாழ். மாவட்டத்துக்கு 9 நாடாளுமன்ற ஆசனங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.

எனினும், இந்த எண்ணிக்கை 2014ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவுப் பட்டியலின்படி 7 ஆசனங்களாகக் குறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
—————
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *