யாழ். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கோண்டாவில் இலங்கை பேருந்து சாலைக்குப் பின்புறமாக உள்ள பகுதியில் இடம்பெற்ற வன்முறையில் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களில் ஒருவரது கை துண்டிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்துக் காரணமாக அதனைக் கட்டுப்பட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட வன்முறைக் கும்பலே இந்த அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளது.
சம்பவத்தில் வாகனங்கள் உட்பட பெறுமதியான பொருட்கள் அடித்து நொருக்கப்பட்டுள்ளன.
சம்பவத்தில் ஒருவரின் கை துண்டாடப்பட்டதுடன் குறைந்தது எட்டு பேர் படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் கூறியுள்ளனர்.
———–
Reported by : Sisil.L