வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட் பட்ட அராலி கிழக்கு ஜே163 கிராம சேவகர் பிரிவில் உள்ள இரண்டு வீடுகளில் அண்மையில் எரிவாயு அடுப்புகள் வெடித்துச் சிதறியுள்ளன.
கடந்த 28ஆம் திகதி ஒரு வீட்டிலும் 29ஆம் திகதி மற்றைய வீட்டிலும் இந்த வெடிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
இது தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் ஒரு வீட்டாரால் நேற்று முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
வட்டுக்கோட்டை பொலிஸாரின் இரண்டு குழுக்கள் குறித்த வீடுகளுக்குச் சென்று அடுப்பை பார்வையிட்டன. சமையலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போதே எரிவாயு அடுப்பு இவ்வாறு வெடித்துச் சிதறியதாகவும் எனினும் எவருக்கும் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை எனவும் சம்பவம் நிகழ்ந்த வீட்டு உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
Reported by : Sisil.L