யாழில் இரு தினங்களுக்கு முன் காணாமல் போன அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் கிணறொன்றில் இருந்து சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். சண்டிலிப்பாயைச் சேர்ந்த மாணிக்கம் ஜெயக்குமார் (வயது 51) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேலும் இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
யாழ்.கோப்பாய் பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராகக் கடமையாற்றும் சண்டிலிப்பாயைச் சேர்ந்த மாணிக்கம் ஜெயக்குமார் கடந்த 28.09.21 காலை 6.00 மணிக்கு வீட்டிலிருந்து நடைப் பயிற்சிக்காகச் சென்றவர் காணாமல் போயிருந்தார்.
இந்நிலையில் நேற்று (30) நவாலிப் பகுதியில் இருந்த கிணறொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
——–
Reported by : Sisil.L