யாழில் எரிபொருள் கொள்வனவுக்கு முண்டியடித்த மக்கள்

யாழ்ப்பாணத்தில் பெற்றோலை கொள்வனவு செய்வதற்காக பொதுமக்கள் எரி பொருள் நிரப்பு நிலையங்களில் முண்டியடித்தனர். சப்புகஸ்கந்தை எண் ணெய் சுத்திகரிப்பு நிலையம் நேற்று முதல் 50 நாட்களுக்கு மூடப்பட்டது. இந்த தகவல் வெளியானது முதல் யாழ்ப்பாணத்தில் எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக பொதுமக்கள் முண்டியடித்தமையை நேற்று காண முடிந்தது.
வாகனத் தாங்கிகளில் எரிபொருளை நிரப்பியமைக்கு மேலதிகமாக போத் தல்களிலும் எரிபொருளை மக்கள் கொள்வனவு செய்தமையை அவதானிக்க முடிந்தது. யாழ்ப்பாணத்தில் மட்டுமின்றி நாடு முழுவதும் இதே நிலைமையே காணப்பட்டன. இதேவேளை, நேற்றைய தினம் சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டும் இருந்தமையைக் காண முடிந்தது.
——-
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *