இரட்டைக் குழந்தைகளைப் பிரசவித்த தாயார் கொவிட்-19 நோயினால் பரிதாபமாக உயிரிழந்தார். இணுவிலைச் சேர்ந்த அஜந்தன் இனியா (வயது-25) என்ற பெண்ணே இவ்வாறு யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழந்தார். குழந்தைகள் இருவரும் யாழ். போதனா வைத்தியசாலையில் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர்.
“கடந்த 4ஆம் திகதி கர்ப்பிணித் தாய்க்கு மூச்செடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அதனால் அவர் அன்றைய தினம் தெல்லிப்பழை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். எனினும் அவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். அன்றைய தினமே அவருக்கு கொவிட்-19 நோய்த் தொற்றுள்ளமை உறுதிப்படுத் தப்பட்டுள்ளது.
குறித்த கர்ப்பிணித் தாய்க்கு கடந்த புதன்கிழமை ஆண் குழந்தை ஒன்றும் பெண் குழந்தை ஒன்றுமாக இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன. அதன் பின்னர் தாயாருக்கான சிகிச்சைகள் தொடர்ந்த நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்” என்று இறப்பு விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
இறப்பு விசாரணையை யாழ். போதனா வைத்தியசாலை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் முன்னெடுத்தார். சடலம் உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் சுகாதார முறைப்படி தகனம் செய்ய அனுமதிக்கப் பட்டது.
——————-
Reported by : Sisil.L