யாழ். மாவட்டத்தில் நேற்று 58 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
அத்துடன், யாழ்ப்பாணத்தில் மூவரும், மன்னாரில் ஒருவருமாக வடக்கில் நால்வர் உயிரிழந்தனர்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நடத்தப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளிலேயே இந்தத் தகவல் வெளியானது.
இதன்படி, பருத்தித்துறை மருத்துவ அதிகாரி பிரிவில் 18 பேரும், யாழ்ப்பாணம் மாநகர மருத்துவ அதிகாரி பிரிவில் 10 பேரும், காரைநகர் மருத்துவ அதிகாரி பிரிவில் 09 பேரும், நல்லூர் மருத்துவ அதிகாரி பிரிவில் 08 பேரும்,உடுவில் மருத்துவ அதிகாரி பிரிவில் 4பேரும், சங்கானை மருத்துவ அதிகாரி பிரிவில் 3 பேரும் கரவெட்டி மருத்துவ அதிகாரி பிரிவில் 2 பேரும் சாவகச்சேரி,வேலணை, மருதங்கேணி மருத்துவ அதிகாரி பிரிவுகளில் தலா ஒருவரும்,யாழ். போதனா வைத்தியசாலையில் ஒருவருமாக 58 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.
இதேபோன்று கிளிநொச்சி பொது மருத்துவமனையிலும், மன்னார் பொது மருத்துவமனையிலுமாக இருவர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.
இதேவேளை, நேற்றைய தினம் கொரோனா தொற்றால் நால்வர் உயிரிழந்தனர். யாழ். மாநகர மருத்துவ அதிகாரி பிரிவில் 86 வயது ஆணும், யாழ்.போதனா வைத்தியசாலையில் 91 வயது ஆணும், 78 வயது ஆணுமாக மூவர் உயிரிழந்தனர். மன்னார் பொது மருத்துவமனையில் 74 வயது பெண் தொற்றுக்குப் பலியானார்.
—————–
Reported by : Sisil.L