யாழ்ப்பாணத்தில் 102 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 135 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட் டது. யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை ஆய்வுகூடத்தில் நேற்று 737 பேரின் மாதிரிகள் பி. சி. ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில் 114 பேருக்கு தொற்று
உறுதிப்படுத்தப்பட்டது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில், யாழ். போதனா மருத்துவமனையில் 29 பேரும், உடுவில் மருத்துவ அதிகாரி பிரிவில் 29 பேரும், கோப்பாய் பிரதேச மருத்துவமனையில் 14 பேரும், தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையில் 10 பேரும், தெல்லிப்பழை மருத்துவ அதிகாரி பிரிவில் 8 பேரும் சண்டிலிப்பாய் மருத்துவ அதிகாரி பிரிவில் 3 பேரும், சங்கானை பிரதேச மருத்துவமனையில் 3 பேரும், பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் இருவரும், பண்டத்தரிப்பு பிரதேச மருத்துவமனையில் ஒருவரும், சாவகச்சேரி ஆதார மருத்துவ மனையில் ஒருவரும், நல்லூர் மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவருமென 102 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.
புதுக்குடியிருப்பு மருத்துவ அதிகாரி பிரிவில் 25 பேருக்கும், மாந்தை கிழக்கு மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவருக்கும், முல்லைத்தீவு பொது மருத்துவ மனையில் ஒருவருக்குமென முல்லைத்தீவு மாவட்டத்தில் 27 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
வவுனியா பொது மருத்துவமனையில் இருவரும், வவுனியா மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவரும், நெடுங்கேணி பிரதேச மருத்துவமனையில் ஒருவரும், செட்டிகுளம் ஆதார மருத்துவமனையில் ஒருவருமென வவுனியா மாவட்டத்தில் ஐவர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.
இதேபோன்று, மன்னார் பொது மருத்துவமனையில் ஒருவர் தொற்றாளராக உறுதிப்படுத்தப்பட்டார். தவிர, இரணைமடு விமானப்படை முகாமில் 7 பேருக்கும், மன்னார் கடற்படையில் இருவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
—————–
Reported by : Sisil.L