மேல்மாகாணத்தில் டெல்டா கொரோனா வைரஸ் வேகமாக பரவுகின்றது என பேராசிரியர் நீலிகா மாலவிகே தெரிவித்துள்ளார்.இலங்கையில் டெல்டா கொரோனா வைரஸ் மாறுபாட்டின் நான்கு பிறழ்வுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமூகத்தில் வேகமாகப் பரவும் டெல்டா கொரோனா வைரஸ் காரணமாக நான்கு பிறழ்வுகள் ஏற்பட்டுள்ளன என பேராசிரியர் நீலிகா மாலவிகே தெரிவித்துள்ளார். வேகமாக பரவும் நிலை காணப்படும்போது பிறழ்வுகள் வேகமாக இடம்பெறும் என அவர் தெரிவித்துள்ளார்.
டெல்டா கொரோனா வைரஸ் மாறுபாட்டின் ஒரு பிறழ்வு( ஏ 222வி) பல நாடுகளில் காணப்படுகின்றது. இன்னொன்று (ஏ 1078 எஸ்) இலங்கையிலும் மலேசியாவிலும் காணப்படுகின்றது எனத் தெரிவித்துள்ள அவர் ஏனைய இரண்டும் இலங்கையில் மாத்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேல் மாகாணத்தில் கொரோனா டெல்டா வைரஸ் வேகமாக பரவுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் தடுப்பூசிகள் பலன் அளிப்பதால் மக்கள் கரிசனை கொள்ள வேண்டிய அவசியமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
Reported by : Sisil.L