இலங்கை இராணுவத்தின் 24ஆவது தளபதியாக மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று (31) ஜனாதிபதி ஊடகப் பிரிவின் ஊடாக இது அறிவிக்கப்பட்டது.
மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே தனது உத்தியோகபூர்வ நியமனக் கடிதத்தை இன்று (31) கொழும்பு ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோத்தபாயவிடமிருந்து பெற்றுக்கொண்டார்.
இராணுவத்தின் சிரேஷ்ட அதிகாரியான விக்கும் லியனகே லெப்டினன்ட் ஜெனரல் பதவிக்கு உயர்த்தப்பட்டு நாளை (ஜூன் 01) இராணுவத் தளபதியாக கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.
லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே 1986 ஆம் ஆண்டு ஒக்டோபர் 27ஆம் திகதி இலங்கை இராணுவத்தில் கடெட் அதிகாரியாக இணைந்து கொண்டார்.
தியத்தலாவயில் உள்ள புகழ்பெற்ற இலங்கை இராணுவ அகடமியிலும் பாகிஸ்தான் இராணுவ அகடமியிலும் அடிப்படை இராணுவப் பயிற்சியைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Reported by.Anthonippillai.R