இலங்கையர்களுக்கு மூன்றாவது கொரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்படுத்தப்படுகிறது.இலங்கையர்களுக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பிறகும் மூன்றாவது டோஸ் வழங்கப்பட வாய்ப்புள்ளது என சுகாதார சேவைகளின் பிரதிப் பணிப்பாளர் நாயகமான மருத்துவர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
மூன்றாவது தடுப்பூசி தொடர்பில் ஊடகவியலாளர் கேள்வி எழுப்பிய போது,
இன்புளுவன்சா போன்ற எந்தவொரு வைரஸுக்கும் வருடாந்தம் தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் என்றார்.இருப்பினும், வருடாந்தம் தடுப்பூசி செலுத்துவது தொடர்பிலான அவசியம் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை, உலகளாவிய ஆராய்ச்சி மற்றும் மருத்துவத் துறையில் மூன்றாவது தடுப்பூசி செலுத்துவதற்கான சாத்தியம் உருவாகியுள்ளது. மேலும் தேவைப்பட்டால் இலங்கையர்களுக்கு மூன்றாவது தடுப்பூசி செலுத்தப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
—————–
Reported by : Sisil.L