படுகொலை செய்யப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா ரவிராஜின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று(10) காலை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
சாவகச்சேரியில் ரவிராஜின் உருவச் சிலை அமைந்துள்ள நினைவுச் சதுக்கத்தில் முன்னாள் நகர சபை உறுப்பினர் ஞா.கிஷோர் தலைமையில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, ரவிராஜின் குடும்பத்தினர் கலந்து கொண்டு மலர் மாலை அணிவித்து சுடரேற்றி அஞ்சலி நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர்.
இந்நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.
—————————
Reported by : Sisil.L