மிளகாய், உருளைக்கிழங்கு மற்றும் வெங்காய இறக்குமதி செய்வதை நிறுத்தி விட்டு உள்நாட்டில் உற்பத்தி செய்யத் தீர்மானித்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் நுகர்வுக்காகத் தேவையான மிளகாய், உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்தை உள்நாட்டில் உற்பத்தி செய்யும் திட்டத்தைச் செயற்படுத்துவதற்கான நடவடிக்கையைத் துரிதப்படுத்துமாறு விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே விவசாய அமைச்சில் இடம் பெற்ற கலந்துரையாடலில் விவசாயத் திணைக்களத்தின் பணிப் பாளர் நாயகம் கலாநிதி அஜந்த டீ சில்வாவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
“செழிப்பின் நோக்கு” கொள்கை அறிக்கைப்படி உள்நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய அனைத்து பயிர்களையும் இங்கு உற்பத்தி செய்ய வேண்டும் என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.
உருளைக்கிழங்கு, வெங்காயம் மற்றும் மிளகாய் இறக்குமதி செய்ய அதிக அந்நியச் செலாவணி விரயமாகிறது என்றும் அந்தப் பணத்தை இந்த நாட்டில் சேமிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
உருளைக்கிழங்கு, வெங்காயம் மற்றும் மிளகாய் ஆகிய உற்பத்திகளை உள்நாட்டில் உற்பத்தி செய்வதற்காகத் தனியார் முதலீட்டாளர்களை அதிகளவில் ஈடுபடுத்திக் கொண்டு குறித்த இலக்கை அடைய வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
————–
Reported by : Sisil.L