மியன்மாரின் சாஜைங் (Sagaing) பிராந்தியத்தில் இராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் குழந்தைகள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இராணுவ ஆட்சியை எதிர்ப்பவர்கள் ஒன்றுகூடி உள்ளதாக கிடைத்த தகவலையடுத்து அப்பகுதியில் இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
பாசிகி கிராமம் அருகே இராணுவ ஆட்சிக்கு எதிரான அமைப்பு, தனது உள்ளூர் அலுவலகத்தை திறந்தது.
இந்நிகழ்ச்சியில் 150 பேர் கலந்து கொண்டனர். அப்போது, அவர்கள் மீது போர் விமானம் குண்டு வீசியுள்ளது. பின்னர் அரை மணி நேரம் கழித்து ஹெலிகாப்டர் மூலம் துப்பாக்கிச்சூடும் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு ஐ.நா. சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மியன்மாரில் 2021-ம் ஆண்டு இராணுவ ஆட்சி ஏற்பட்ட பிறகு சுமார் 3 ,000 பொதுமக்கள் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டுள்ளனர்
Reported by:Maria.S