மாம்பழ உற்பத்தியில் சாதனை

உலக சிறுவர் தினத்தையொட்டி கல்முனை கமு/கமு/ அஸ்-ஸுஹறா வித்தியாலயத்தில் மாம்பழ அறுவடை நிகழ்வு இன்று (02) பாடசாலை அதிபர் அதிபர் எம்.எச்.எஸ்.ஆர்.மஜிதிய்யா தலைமையில் இடம் பெற்றது.

சுமார் 100 இற்கும் அதிகமாக அறுவடை செய்யப்பட்ட டொம் டேசி மாம்பழ இனங்கள் முதற்கட்டமாக அதிதிகளால் உத்தியோகபூர்வமாக வெட்டப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டன.

இந்நிகழ்விற்குப் பிரதம அதிதியாக கல்முனை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ் சஹுதுல் நஜீம், கௌரவ அதிதியாக பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எச்.எம்.ஜாபிர் (நிர்வாகம்) மற்றும் ஏனைய அதிதிகளாக முன்னாள் பாடசாலை அதிபர் ஏ.எல்.ஏ.கமால், பாடசாலை அபிவிருத்திச் சங்க நிறைவேற்றுக்குழு செயலாளர், பொறியியலாளர் எம்.ரீ.எம்.அனப், உறுப்பினர்களான ரீ.எம்.இர்பான், ஜே.எம்.ஜெஸீல், ஐ.எம்.சமீறுல் இலாஹி பழைய மாணவர் செயலாளர் எஸ்.எச் எம் .அஜ்வத், எம்.எம் முஹ்ஷீன் அபிவிருத்தி உத்தியோகத்தர் எல்.றிஸான், அமீர் ஏ பாறூக் இமுன்னாள் நாவதன்வெளி பிரதேச சபை செயலாளர் எம். பி. அப்துல் றஹீம் பாடசாலை ஆசிரியர்கள் நலன்விரும்பிகள் கலந்து சிறப்பித்தனர்.

இதன்போது சுமார் 100 இற்கும் அதிகமாக மாம்பழங்கள் அறுவடை செய்யப்பட்ட நிகழ்வானது அதிபர் உட்பட மாணவர்களின் தியாகம், அர்ப்பணிப்பு, ஒழுக்கம் சம்பந்தப்பட்டதுடன் மாணவர்களின் சுற்றாடல் சார் நடவடிக்கைகள் இந்த அறுவடை செயற்பாட்டில் தங்கி இருப்பதாகவும் ஒழுக்கம் உள்ள இடத்தில் தான் காய் கனிகள் பாதுகாப்பாக இருக்கும் எதிர்காலத்தில் இச்சிறுவர்களின் திட்டங்கள் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவிப்பதாக அதிதிகளாக கலந்து கொண்டவர்கள் குறிப்பிட்டனர்.

Reported by :S.Kumara

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *