உயர் தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளில் அடுத்த வாரத்தின் பின்னரும் ஆசிரியர்கள் இணைந்துகொள்ளாத பட்சத்தில், அவசரகால சட்டத்தின் கீழ் கல்வியையும் அத்தியாவசிய சேவையாக்கவுள்ளதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
கல்வி அமைச்சின் முன்னேற்றம் தொடர்பில் இன்று முற்பகல் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை கூறியுள்ளார்.
எந்தவொரு சூழ்நிலையிலும், நாட்டின் மாணவர்களை பணயக்கைதிகளாக்க இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி சூளுரைத்துள்ளார்.
Reported :Maria.S