திருடப்பட்டு மறைத்து வைக்கப்பட்டுள்ள நிதியை மீட்பதற்கு எதிர்க்கட்சிகள் நடவடிக்கை எடுத்து வருகிறது.”என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அம்பாறையில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
அங்கு மேலும் பேசிய அவர்,
தற்போது ஏற்பட்டுள்ள அழிவுகளுக்கு குடும்ப ஆட்சியே காரணம். வரலாற்றில் நாடு காணாத மோசமான அரசாங்கம் தற்போதைய அரசாங்கம்.
இந்நிலையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
பல்வேறு நாடுகளில் திருடப்பட்டு மறைத்து வைக்கப்பட்டுள்ள நிதியை மீட்பதற்கு எதிர்க்கட்சிகள் நடவடிக்கை எடுத்து வருகிறது .
நம்பிக்கையில்லா பிரேரணை மற்றும் பதவி நீக்க பிரேரணையை நிறைவேற்றி அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப எதிர்க்கட்சி செய்யப்பட்டு வருகின்றது.
இதேவேளை 20 ஆவது திருத்தத்தை இரத்து செய்து 19 ஆவது திருத்தத்தை ஸ்தாபிப்பதாகவும் சஜித் பிரேமதாச உறுதியளித்தார்.