வெலிக்கடை, மஹர மற்றும் பூஸா சிறைகளிலுள்ள மரண தண்டனைக் கைதிகள் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருவதாக சிறைச்சாலைப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க இன்று(28) காலை தெரிவித்தார்.
வெலிக்கடை சிறையிலுள்ள ஒரு கட்டிடத்தின் மீதிருந்து 10 கைதிகள் போராட்டம் நடத்தி வருவதாகவும் மேலும் 150 மரண தண்டனைக் கைதிகள் தமது உணவை மறுத்து வருவதாகவும் ஏக்கநாயக்க தெரிவித்தார். மஹர சிறைகளில் 70 கைதிகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள அதேவேளை பூசா சிறைச்சாலையில் ஒரு கைதி உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
கட்டிடங்களின் மேல் ஆர்ப்பாட்டம் செய்யும் கைதிகள் மன்னிப்பு வழங்குவதற்கான அரசாங்கத்தின் திட்டத்தில் கருத்தில் கொள்ளப்படமாட்டார்கள் என சிறைச்சாலைத் திணைக்களம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
———————–
Reported by : Sisil.L