ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று(20) மன்னார் மாவட்டத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை முன்னெடுத்திருந்தார்.
மன்னார் மக்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து அப் பிரச்சினைகளுக்கு சாத்தியமான தீர்வுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி அங்கு சென்றிருந்தார்.
மன்னார் நகருக்கு சென்ற ஜனாதிபதி, ஒல்லாந்தர் கோட்டையின் புனரமைப்பு பணிகளை பார்வையிட்டார்.
நடுக்குடா மீனவ கிராமத்தின் மக்களையும் ஜனாதிபதி சந்தித்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
பின்னர் மன்னாரில் காற்றாலை மின் உற்பத்தி நிர்மாணிக்கப்பட்டு வரும் பிரதேசத்தையும் ஜனாதிபதி கண்காணித்துள்ளார்.
அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, கஞ்சன விஜேசேகர, வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க உள்ளிட்ட பலர் ஜனாதிபதியின் கண்காணிப்பு விஜயத்தில் கலந்துகொண்டிருந்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
Reported by :Maria.S