மன்னாரில் பொதுமக்கள் மீது கடற்படையினர் தாக்குதல்

மன்னார் பிரதேச செயலகத்துக்குட்பட்ட  வங்காலைப்பாடு என்னும் கிராமத்தில் இருந்து கடற்றொழிலுக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு சென்று வந்த கிராமத்தவர் ஒருவரை நள்ளிரவு வேளையில் மதுபோதையில் இருந்த கடற்படையினர் வழிமறித்து எவ்விதக் காரணமும் இல்லாமல் வெறித்தனமாகத் தாக்கியுள்ளனர்.

 
அதை நேரில் பார்த்த கிராம சேவகர் ஒருவர் அவரை ஏன் தாக்குகின்றீர்கள் என கடற்படையினரை கேட்கச் சென்ற போது பத்துக்கும் மேற்பட்ட கடற்படையினர் சேர்ந்து அக்கிராம சேவகரையும் தாக்கியுள்ளனர். இது தொடர்பாக பேசாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு கொடுக்கச் சென்றபோது முறைப்பாட்டை அவர்கள் ஏற்க மறுத்து விட்டனர். உடனடியாக அவர்களின் உடல் நலன் கருதி பேசாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 
இதேவேளை சம்பவ இடத்திற்கு  நேரில் சென்று நிலைமைகளை அவதானித்த நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளதாவது, “கடற்படையினரின் இந்த அராஜகமானது தற்போதிருக்கும் அரசாங்கத்தின் உண்மையான மனநிலையை வெளிக்காட்டியுள்ளது.


குறித்த தாக்குதல் சம்பவமானது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஆகவே அதற்கு எனது  கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
———–

Reported by : Sisil.L



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *