கடந்த 2014ஆம் ஆண்டுக்குப் பின் முதல் முறையாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 100 டொலரைத் தாண்டியுள்ளது.
அதன்படி இன்று (24) பிரென்ட் மசகு எண்ணெய் குறியீட்டின் படி மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 101.5 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான நெருக்கடி நிலையே இதற்குக் காரணம் என கூறப்படுகிறது.
—————–
Reported by : Sisil.L