நீர் மின் நிலையங்களுடன் தொடர்புடைய பகுதிகளில் போதிய மழையின்மையால் பொதுவாக அவற்றின் நீர் மட்டத்தில் 28% ஆகக் குறைந்துள்ளன.
இதனால் நீர் மின் உற்பத்தி 20% குறைந்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அடுத்த சில நாட்களில் போதிய மழை பெய்யாவிட்டால், 10 நாட்களின் பின் பல நீர்த்தேக்கங்களில் இருந்து மின் உற்பத்தியை நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
சமனலவெவவின் நீர் மட்டம் 12% ஆகவும் காசல்ரீ நீர் மட்டம் 10% ஆகவும் குறைந்துள்ளன.
மூன்று மாதங்களுக்கு முன்பு, நாட்டின் நாளாந்த மின்சாரத் தேவையில் 70% நீர் மின்சாரத்திலிருந்து உற்பத்தி செய்யப்பட்டு, தற்போது 20% ஆகக் குறைந்துள்ளது.
இந்தச் சூழ்நிலையின் அடிப்படையில் அனல் மின் நிலையங்கள் தொடர்ந்து இயங்கி தேவையான அளவு மின்சாரத்தை உற்பத்தி செய்து வருகின்றன.
இதேவேளை நுரைச்சோலை அனல்மின் நிலையத்திலுள்ள மூன்று மின் உற்பத்தி இயந்திரங்களும் தற்போது இயங்கி வருகின்ற போதிலும், எதிர்காலத்தில் பராமரிப்புக்காக குறைந்தபட்சம் ஒன்றையாவது நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
——————
Reported by : Sisil.L