15 நாட்களுக்கு தேவையான எரிபொருள் மாத்திரமே கையிருப்பில் இருக்கின்றன என்ற அறிவித்தலையடுத்து நுவரெலியாவில் உள்ள ஒவ்வொரு எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன.நாட்டில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அறிவிப்பின் பின் நுவரெலியாவிலுள்ள இடங்களில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோல் இருப்பு இல்லை என்னும் அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது. ஒரு சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மட்டுமே பெற்றோல் இருப்பு உள்ளது.
இதனால் அந்த நிலையங்களில் நீண்ட வரிசையில் வாகனங்கள் எரிபொருள் நிரப்பக் காத்திருப்பதை அவதானிக்க முடிகிறது.
————-
Reported by : Sisil.L