தான் பெற்றெடுத்த குழந்தையை எரித்துக் கொன்றார் என்ற குற்றச்சாட்டில் தாயார் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை கந்தளாய் – பேராறு – மத்ரஸா நகரைச் சேர்ந்த 35 வயதான மூன்று பிள்ளைகளின் தாயொருவரே இவ்வாறு கைது செய் யப்பட்டுள்ளார் என்று பொலி ஸார் தெரிவித்துள்ளனர். அந்தப் பெண்ணின் கணவர் நீண்டகாலமாக வெளிநாட்டில் வசிக்கும் நிலையில் இவர் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத் துள்ளார். இதையடுத்து தனக்கு பிறந்த சிசுவை எரித்துக் கொன்று அதன் உடலை பற்றைக்குள் எறிந்துள்ளார்.
தெரு நாய்கள் அந்த உடலை வீதியில் கௌவிச் சென்ற நிலையில், இதை அவதானித்த அயலவர்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் விசாரணை நடத்திய பொலிஸார் சிசுவை பிரசவித்த தாயாரை கைது செய்துள்ளனர்.
———————–
Reported by : Sisil.L