ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதத்துக்குள் சுற்றுலாத்துறை இயல்பு நிலைக்கு திரும்பும் என எதிர்பார்ப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சரான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சுற்றுலாத்துறை அமைச்சர்,
ஜனவரி மாதத்தில் சுமார் 100,000 – 125,000 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், நாடு வழமைக்குத் திரும்பும் நிலையில் குறைந்தது 200,000 சுற்றுலாப் பயணிகள் வருகை தருவர் என எதிர்பார்ப்பதாகவும், மத்திய கிழக்கு மற்றும் இந்தியா ஆகிய நாடுகளிலிருந்து அதிக சுற்றுலாப் பயணிகளை நாட்டுக்கு வரவழைத்து சுற்றுலாத் துறையை மேம்படுத்த எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை சுமார் 180,000 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வந்ததாகவும், அதில் 86,000 பேர் டிசம்பர் மாதத்தில் மாத்திரம் வருகை தந்திருப்பது நல்ல போக்கை பிரதிபலிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
——————
Reported by : Sisil.L

