புலிகளின் சொத்துக்கள் எதுவும் என்னிடம் இல்லை: கே.பி.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சொத்துகள் எதுவும் என்னிடம் இல்லை. இறுதிப்போரின் போது நான் மலேசியாவில் தலைமறைவாகி யிருந்தேன்.”  என்று புலிகள் அமைப்பின் சர்வதேச வலையமைப்பின் பிரதானியாக கருதப்பட்ட கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதன் தெரிவித்தார்.

 
கிளிநொச்சியில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர்,  இறுதிப் போருக்குப் பிறகு புலிகளின் சொத்துகள் உங்கள் வசமாகின என தகவல்கள் வெளியாகின. அந்தச் சொத்துகளுக்கு என்ன நடந்தது” என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே கே.பி. மேற்கண்டவாறு கூறினார். “இறுதிப்போரின்போது நான் மலேசியாவில் தலைமறைவாகியிருந்தேன். எனக்கு எந்தவொரு சொத்தும் வழங்கப்படவில்லை. நாளாந்த செலவுக்குப் பணம் வழங்கப்பட்டது. அவ்வாறு சொத்துகள் இருந்திருந்தால் எமது மக்களை அழிவில் இருந்து மீட்டிருக்கலாம். அவர்கள்(புலிகள்) எவ்வாறான சொத்துகளை விட்டுச்சென்றனர் என்பது எவருக்கும் தெரியாது. எனவே, இப்பிரச்சினைக்கு இத்துடன் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்-என்றார்.
———
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *