புலம்பெயர்ந்த மக்கள் வடமாகாணத்தில் முதலீடுகளை மேற்கொள்வதற்கான விருப்பத்தைக் கொண்டிருந்தால் அதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்திருக்கின்றார்.
யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநரின் அலுவலகத்தில் பத்திரிகை ஆசிரியர்களை நேற்று சந்தித்த போதே இது தொடர்பில் அவர் தெரிவித்தார். வடபகுதி மக்கள் தமது பிரச்சினைகளுக் குத் தீர்வைப் பெற்றுக்கொள்வதற்கு எந்த வேளையிலும் தொடர்புகொள்வதற்கான ஏற்பாடு செய்து கொடுக்கப்படும் எனவும் தெரிவித்த அவர், வடபகுதியிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ளவர்கள் மாவட்ட செயலகங்களில் உள்ள அலுவலகங்கள் மூலமாகவும் தமது பிரச்சினை களைத் தெரியப்படுத்த முடியும் எனவும் சுட்டிக்காட்டினார்.
காணிப் பிரச்சினை, காணி சுவீகரிப்பு போன்ற பிரச்சினைகள் குறித்தும் தான் கவனம் செலுத்துவதாகவும் அவர் தெரிவித்தார். அதேவேளை, மக்களுடைய பிரச்சினைகளை அறிந்து அவற்றுக்கான தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்காக வடக்கிலுள்ள மாவட்டங்களுக்கு தான் கிரமமாக விஜயம் செய்யவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
—————
Reported by : Sisil.L