தமிழ் -சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு லங்கா சதொச விற்பனை நிலைய வலையமைப்பின் ஊடாக சந்தையில் கிடைப்பதை விட குறைந்த விலையில் 5 அத்தியாவசிய நுகர்வுப்பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதியை வாடிக்கையாளர்களுக்கு வழங்க வர்த்தக அமைச்சு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
அரிசி, பால் மா, சீனி மற்றும் தேயிலை அடங்கிய இந்த லங்கா சதொச நிவாரணப் பை 1950 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சாதாரண சந்தை விலையை விட இந்த ஐந்து பொருட்கள் மூலம் நுகர்வோர் ரூ.700 அல்லது அதற்கு மேற்பட்ட நன்மைகளைப் பெறுவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த வருடத்துக்கான நிவாரணப் பொதிகள் லங்கா சதொச விற்பனை நிலையங்களினால் இம்மாதம் 9ஆம் திகதி முதல் விநியோகிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நிவாரணப் பொதியில் அடங்கும் பொருட்கள் வருமாறு:
5 கிலோ நாட்டு அரிசி, 05 கிலோ சம்பா அரிசி,ஹைலண்ட் பால் மா 400 கிராம், 1 கிலோ பளுப்பு சீனி, 100 கிராம் தேயிலை
——————
Reported by : Sisil.L