இலங்கையின் 27ஆவது பிரதமராக தினேஷ் குணவர்தன சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
பிரதமர் அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
சிரேஷ்ட அரசியல்வாதியான தினேஷ் குணவர்தன, வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட பல அமைச்சுப் பதவிகளை வகித்துள்ளதுடன், பிரதமராக பதவியேற்பதற்கு முன்னதாக சபை முதல்வராகவும் செயற்பட்டார்.
அண்மையில், ஜனாதிபதி பதவிக்கான வேட்புமனு கோரப்பட்டபோது, தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பெயரை தினேஸ் குணவர்தனவே முன்மொழிந்திருந்தார்.
—————–
Reported by :Maria.S