எதிர்கட்சி அரசியல் கட்சிகள் இணைந்து எதிர்காலத்தில் அமைக்கப்படவுள்ள அரசாங்கம் தொடர்பில் உடன்படிக்கையை தயாரித்து வருவதாக இடதுசாரி மையத்தின் அழைப்பாளர் சமீர பெரேரா தெரிவித்துள்ளார்.
அந்த அரசாங்கத்தின் பிரதமர் பதவிக்கு மைத்திரிபால சிறிசேன, சஜித் பிரேமதாச, அனுர திஸாநாயக்க மற்றும் கரு ஜயசூரிய ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இடைக்கால அரசை அமைப்பதா அல்லது வேறு ஆட்சி முறையை அமைப்பதா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், அந்த நிர்வாகத்தின் கீழ் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து நீண்டகாலமாக ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், புதிய அரசை காலவரையறையுடன் நடத்துவதற்கு அடிப்படை உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
—————
Reported by:Anthonippillai.R