உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தது. இந்த நிலையில் ரஷ்ய ஜனாதிபதி புட்டினின் மகள்களுக்கு எதிராகவும் அமெரிக்கா தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.
புட்டினின் மகள்களான மரியா புட்டினா, கேட்டரினா டிக்கோனோலா ஆகியோர் அமெரிக்க நிதி அமைப்பில் பரிமாற்ற நடவடிக்கை மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு அமெரிக்காவில் சொத்துக்கள் இருந்தால் அவை முடக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ரஷ்ய பிரதமர் மினகல் மிகஷ்டின், வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோலின், குடும்பத்தினர், முன்னாள் அதிபர் டிமிட்ரி மெத்வடேல் ஆகியோருக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ரஷ்யாவின் ஸ்பெர், ஆல்பா வங்கிகள் அமெரிக்க நிதி அமைப்பை தொடர்பு கொள்ள முடியாது என்றும் இந்த வங்கிகளை அமெரிக்கர்களும் பயன்படுத்த இயலாது என்றும் தெரிவித்துள்ளது.
Reported by : Sisil.L