பிரித்தானியாவின் சிவப்பு பட்டியலிலிருந்து இலங்கை உட்பட 8 நாடுகள் நீக்கம்

எதிர்வரும் 22ஆம் திகதி  புதன்கிழமை அதிகாலை 4.00 மணி முதல் இலங்கை உள்ளிட்ட சில நாடுகளில் பிரித்தானியாவின் சிவப்பு பட்டியலிலிருந்து விடுவிக்கப்பட உள்ளன.


கொவிட் பரவல் காரணமாக இலங்கை உள்ளிட்ட சில நாடுகள் பிரித்தானியாவின் சிவப்பு அறிக்கைக்குள் உள்வாங்கப்பட்டன.
அதன்படி, துருக்கி, பாகிஸ்தான்,மாலைதீவு, எகிப்து, பிலிப்பைன்ஸ்,ஓமான் மற்றும் கென்யா ஆகிய நாடுகள் அந்தச் சிவப்பு பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருந்தன.


இதில் இலங்கை உட்பட சில நாடுகள் இந்தப் பட்டியலிலிருந்து எதிர்வரும் 22 ஆம் திகதியுடன் நீக்கப்படுகின்றன.
அந்த வகையில் இலங்கை, துருக்கி, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஓமான், கென்யா, எகிப்து மற்றும் மாலைதீவு ஆகிய எட்டு நாடுகள் சிவப்பு பட்டியலிலிருந்து அடுத்த புதன்கிழமை முதல் நீக்கப்படும்.


இந்த நாடுகளிலிருந்து திரும்பும் பயணிகள் அவர்கள் திரும்பும்போது தனிமைப்படுத்தப்பட வேண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
——————-
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *