தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கையை அடிப்படையாகக்கொண்டு தயாரிக்கப்பட்ட ‘மேதகு” தமிழ்த் திரைப்படத்தை இணையத்தளத்தில் தரவிறக்கம் செய்து விற்பனை செய்தனர் என்ற குற்றச்சாட்டில், நுவரெலியா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர். நுவரெலியா, ஹாவாஎலிய பிரதேசத்தைச் சேர்ந்த இருவரே கைதுசெய்யப்பட்டுள்ளனர். நுவரெலியா, பிரதான பஸ் தரிப்பிடத்தில் வியாபார நிலையமொன்றை நடத்தி வரும் நபரொருவரும் அவரது நண்பர் ஒருவருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நுவரெலியா, கார்கில்ஸ் கட்டட வளாகத்திலுள்ள பிரதான சந்தேகநபருக்குச் சொந்தமான மற்றொரு கடையில் 50 ரூபா வசூலிக்கப்பட்டு, படம் பிரதியெடுத்துக் கொடுக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
மேற்படி இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்று நுவரெலியா பொலிஸார் மேலும் கூறினார்.
———————–
Reported by : Sisil.L