லண்டனில் பிரபல கர்நாடக இசைக் கலைஞராகத் திகழ்ந்த திருமதி சிவசக்தி சிவநேசன் நேற்று முன்தினம் காலமானார்.
லண்டன் பாரதிய வித்ய பவனில் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக வாய்ப்பாட்டு, வீணை
ஆசிரியையாகத் திகழ்ந்த இலங்கையரான சிவசக்தி, லண்டனில் அதிகளவு மாணவ மாணவிகளை வாய்ப்பாட்டிலும் வீணையிலும் அரங்கேற்றியவர்.
இவர்களில் சிலர் இத்துறைகளில் உன்னத ஆற்றல் பெற்றுத் திகழ்வது குறிப்பிடத்தக்கது.
பாரதிய வித்ய பவனின் பரதநாட்டிய நிகழ்ச்சிகளில் சிவசக்தியின் பாட்டு தனியான இடத்தைப் பெற்றது.
‘வாணி பைன் ஆர்ட்ஸ்’ என்ற நிறுவனத்தையும் சிவசக்தி தனது கணவர் சிவநேசனுடன் நிர்வகித்து வந்தார்.
யாழ்ப்பாணம் என். வீரமணி ஐயரின் மாணவியான சிவசக்தி, வீரமணி ஐயரின் ஆக்கங்கள் அனைத்தை யும்
பிரசுரிப் பதில் எடுத்த முயற்சி பெரிதானது.
வீரமணி ஐயரின் கீர்த்தனைகளை மேடைகளில் பிரபலமடையச் செய்வதிலும் அவர் பெரும் அக்கறை
கொண்டிருந்தார்.
பல நற்பணிகளுக்கான நிதி உதவியிலும் அவர் துணை புரிந்தார்.
யாழ்ப்பாணம் இராமநாதன் நுண்கலைக் கல்லூரியிலும் பணியாற்றிய சிவசக்திக்கு வயது 64 ஆகும்.
————————
Reported by : Sisil.L