புதிய ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள ரணில் விக்கிரமசிங்கவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி விக்கிரமசிங்கவுக்கு எழுதிய வாழ்த்துக் கடிதத்தில், இலங்கையின் ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார மீட்சிக்கு இந்தியாவின் ஆதரவை மீண்டும் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
மக்களின் பரஸ்பர நன்மைக்காகவும், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நெருங்கிய நட்புறவை வலுப்படுத்துவதற்காகவும் ஜனாதிபதியுடன் நெருக்கமாகச் செயற்பட எதிர்பார்த்துள்ளதாகவும் இந்தியப் பிரதமர் தெரிவித்துள்ளார்.
—————
Reported by :Maria.S