பிரதமர் ட்ரூடோவுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர்

கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு தான் கொலை மிரட்டல் விடுத்ததாக நீதிமன்றில் நபர் ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 29ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போது இந்தச் சம்பவம் இடம்பெற்றிருந்தது.


ஒன்றாறியோ மாகாணத்தின் கிட்ஸ்னர் பகுதியில் பிரதமர்   பங்கேற்றிருந்த தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றின் போது குறித்த நபர் பிரதமரை அச்சுறுத்தியிருந்தார். பிரதமரை கொலை செய்வதாகவும்  பிரதமருக்கு உடல் ரீதியாக காயங்களை ஏற்படுத்துவதாகவும், தோமஸ் டயர் என்ற அந்நபர் அச்சுறுத்தல் விடுத்திருந்தார்.


வழக்கு விசாரணைகளின் போது தான் பிரதமர் ட்ரூடோவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததை ஒப்புக் கொண்டுள்ளார்.


பிரதமருக்கு மிரட்டல் விடுத்தமை உள்ளிட்ட இரண்டு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10ஆம் திகதி குறித்த நபரை பொலிஸார் கைது செய்தனர்.


பின்ன குறித்த நபர் சொந்தப் பிணை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார்.  எனினும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இருபதாம் திகதி குறித்த நபருக்கு நீதிமன்றம் தண்டனை விதிக்கவுள்ளது.

 ————————–

Reported by :Maria.S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *