கொழும்பில் பிரதமர் அலுவலகம் அருகே நடந்த போராட்டத் தில் பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர் தாரை பிரயோகம் மேற்கொண்டனர்.
காலிமுகத் திடல் போராட்ட மைதானத்தைச் சேர்ந்த பலர், பிரதமர் அலுவலகம் நோக்கி எதிர்ப்பு பேரணியாக வந்து, பிரதமர் பதவியை இராஜினாமா செய்யுமாறு வலியுறுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை பிரதமர் அலுவலகம் முன்பாக பெருமளவு படையினர் குவிக்கப்பட்டுள்ளதுடன் போராட்டகாரர்களை எச்சரிக்கும் வகையில் உலங்கு வானூர்திகளும் தாழ்வாகப் பறந்துள்ளன.
———————-
Reported by : Maria.S