அண்மையில் இந்தியாவிலுள்ள திருப்பதி கோவிலுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விஜயம் செய்தமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
அந்த விஜயம் தொடர்பில் தரிது அமில உடுவரகெதரவினால் செய்யப்பட்ட முறைப்பாட்டைக் கருத்தில் கொண்டு விசாரணை இடம்பெறவுள்ளதாகத் தெரியவருகிறது.
குறித்த முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் எழுத்து மூலம் முறைப்பாட்டாளருக்கு அறிவித்துள்ளார்.
———–
Reported by : Sisil.L