புதிய பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூரிய, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் இன்று (24) பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்விலேயே புதிய பிரதமர் பதவி ஏற்றுக்கொண்டார்.
பதவிப்பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர், அங்கிருந்து வெளியேறும் போது ஊடகங்களுக்கு கருத்து பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,
”இப்போது வேலையை ஏற்க வேண்டும். அதன்பின் கடமைகளை செய்ய வேண்டும். பாராளுமன்றம் இன்று கலைக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது. அதற்கு முன்னர் நான் கடமைகளை பொறுப்பேற்க செல்ல வேண்டும். மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்ததற்கு மிக்க நன்றி. அதை அப்படியே நாங்கள் பாதுகாப்போம்.” என்று கூறினார்.
Reported by: K.S.Karan