பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி; இம்ரான்கான் நிதி கோரி சீனா செல்கிறார்

பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இந்த நாடு தற்போது கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது.
பாகிஸ்தானும் சீனாவும் நட்புறவு நாடுகளாக திகழ்ந்து வருகின்றன. இதனால் நிதி நெருக்கடியை சமாளிக்க சீனாவிடம் நிதி கேட்க இம்ரான்கான் முடிவு செய்துள்ளார்.


இதையடுத்து அவர் அடுத்த மாத தொடக்கத்தில் சீனா செல்ல திட்டமிட்டுள்ளதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இரு நாடுகளின் உறவுகளை மேலும் வலுப்படுத்தவும் பல்வேறு திட்டங்களில் அதிக முதலீடுகளைப் பெறும் வகையில் சீனாவுடன் பல்வேறு ஒப்பந்தங்கள் போடவும் அவர் இந்தப் பயணத்தை மேற்கொள்ளவிருக்கிறார்.


இம்ரான்கானின் சீனப் பயணத்தை அந்நாடு வரவேற்றுள்ளது. இது குறித்து பாகிஸ்தானில் செனட் தலைவர் சாதிக் சஞ்சராணி கூறும் போது, இம்ரான்கானின் சீனப் பயணம் இரு நாட்டு வர்த்தக இணைப்புகளையும் பொருளாதார வாய்ப்புகளையும் உருவாக்கும் எனத் தெரிவித்துள்ளார்.


பண நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானுக்கு நிதி உதவி வழங்க சீனாவும் ஒப்புக் கொண்டுள்ளது.

———————  

Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *