பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள எல்ல – குருல்லன்கல மலையின் வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயை அணைக்கும் பணியில் இராணுவமும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வன பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அவர்கள் தமது ஒத்துழைப்பை வழங்கி வருவதாக பதுளை மாவட்ட இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவி பணிப்பாளர் E.L.M. உதயகுமார தெரிவித்தார்.
வெலிமடை – ஹல்துமுல்ல, கந்தகெட்டிய, பதுளை பிரதேச செயலாளர் பிரிவுகளின் மலைப்பகுதிகளில் ஏற்பட்ட காட்டுத்தீ தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
வறண்ட காலநிலையால் பதுளையின் பல்வேறு வனப்பகுதிகளை அண்மித்து 10 இடங்களில் காட்டுத்தீ பரவல் பதிவாகியுள்ளது.
அத்துடன், காட்டுப் பகுதிகளில் தீ வைப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் பதுளை மாவட்ட இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவி பணிப்பாளர் E.L.M. உதயகுமார தெரிவித்தார்.
Reported by:S.Kumara