பதுளை பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் உட்பட 55 சுகாதார பணியாளர்கள் கொவிட்-19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
பதுளை பொது வைத்தியசாலையின் 15 வைத்தியர்கள் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக பதுளை பொது வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி பாலித ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பதுளை வைத்தியசாலையின் ஆறு வைத்தியர்கள், இரண்டு தாதிகள் மற்றும் கனிஷ்ட ஊழியர் ஒருவருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது.
மேலும், சத்திர சிகிச்சை அரங்குகள் மற்றும் வார்டுகளில் பணி புரியும் மருத்துவர்களால் கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனை தாதியர்கள், இளநிலை ஊழியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கும் கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக மருத்துவர் ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.
————
Reported by : Sisil.L