எதிர்வரும் மாதங்களில் இலங்கையில் பணவீக்கம் 70 சதவீதமாக உயரலாம் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இதனைக் கருத்திற்கொண்டே இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நாணயக் கொள்கைகள் கடுமையாக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை கொள்கை வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது. இதன்படி,இதன்படி, இலங்கை மத்திய வங்கியின் வழமையான வைப்புத்தொகை வசதி வீதம் (SDFR) மற்றும் வழமையான கடன் வசதி வீதம் (SLFR) என்பவற்றை முறையே 14.50 வீதம் மற்றும் 15.50 வீதமாக அதிகரித்துள்ளது.
——————-
Reported by:Anthonippillai.R