பட்ஜெட்டில் எவ்வித தீர்வும் இல்லை – ஜே.வி.பி.

2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் பொருட்களின் விலை அதிகரிப்புக்கு எவ்வித தீர்வும் பரிந்துரைக்கப்படவில்லை என்று ஜே.வி.பி. தெரிவித்துள்ளது.


நிதி அமைச்சரால் நேற்று சமர்ப்பிக்கப்பட்ட வரவு – செலவுத் திட்டம் தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கும்போதே ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எம்.பி. மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


சேதன உரத்தைப் பயன்படுத்தும் விவசாயிகளின் விளைச்சல் பாதிக்கப்பட்டால் நஷ்டஈடு வழங்கப்படும் என்று அரசு தெரிவித்து வந்தாலும், இந்த வரவு – செலவுத் திட்டத்தில் அது குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-


“பொருட்களின் விலை மக்களால் தாங்கிக்கொள்ள முடியாத அளவு அதிகரித்துள்ளமை மற்றும் பொருட்களின் தட்டுப்பாடு என்பன நாட்டில் உள்ள பிரதான பிரச்சினைகளாகும்.


வரவு – செலவுத் திட்டத்தில் அரசின் செலவுகளாக 5.2 டிரில்லியன் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், வருமானமாக 2.2 டிரில்லியன் ரூபா மாத்திரமே குறிப்பிடப்பட்டுள்ளது.


இது 3 டிரில்லியன் ரூபா கடன் பெறும் வரவு – செலவுத் திட்டமாகும்.


இலங்கையின் வீழ்ச்சிப் பொருளாதாரப் பயணத்தை மாற்றியமைக்க எவ்வித திட்டமும் இந்தப் பட்ஜெட்டில் இல்லை” – என்றார்.
——————————


Reported by : Sisil.L



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *