நெடுங்கேணி பிரதேச வைத்தியசாலையில் உயிரிழந்த 24 வயது யுவதி ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று (ஒக்-15) மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகூடப் பரிசோதனையில் குறித்த தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெடுங்கேணி பிரதேச வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவு ஊடாக பெறப்பட்டு அனுப்பி வைக்கப்பட்ட உயிரிழந்த பெண்ணின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டவர் R.றஜீவனா (வயது-24) என மருத்துவ அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
————————
Reported by : Sisil.L