நுவரெலியாவில் அரசுக்கு எதிராக போராட்டம்;  போக்குவரத்து ஸ்தம்பிதம்

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில் இன்று(6) நாடளாவிய ரீதியில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது.  இதை ஒட்டி  அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.


ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசும் பதவி விலகக் கோரியும்,தொடர் விலையேற்றத்தைக் கண்டித்தும் பெரும் போகத்துக்குத் தேவையான இரசாயன உரம் மற்றும் விவசாயத்துக்குத் தேவையான ஏனைய இரசாயன திரவியங்களை பெற்றுத் தருமாறு கோரியும் பல நகரங்களில் இன்றும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.


இதற்கு ஆதரவாக  மதகுருமார்கள், நகர சபை ஊழியர்கள் , நுவரெலியா பொது மாவட்ட வைத்தியசாலை ஊழியர்கள் ,அதிபர் ஆசிரியர் மற்றும் பொது மக்கள் இணைந்து இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.


இப்பேரணியானது நுவரெலியா மத்திய சந்தைக்கு முன்பாக உள்ள “கோட்டா கோ கம” வில் ஆரம்பிக்கப்பட்டு நுவரெலியா பிரதான வீதியினூடாக நுவரெலியா தபால் நிலையத்திற்கு முன்பாக அரசுக்கு எதிராக எதிர்ப்பு கோஷங்கள் எழுப்பப்பட்டு, பதாதைகளை ஏந்தியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
——————

Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *