நிர்ணய விலைக்கு அதிகமாக விற்கப்பட்டால் அரிசி இறக்குமதிக்கு நடவடிக்கை – வர்த்தக அமைச்சர்

நிர்ணய விலைக்கு அதிகமாக அரிசி விற்பனை செய்யப்படும் பட்சத்தில், அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று(25) அமைச்சரவை உபகுழு கூடிய போது, இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

சம்பா உள்ளிட்ட பல அரிசி வகைகள் இவ்வாறு நிர்ணய விலைக்கு அதிகமாக விற்பனை செய்யப்படுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சம்பா அரிசி 230 ரூபாவிற்கும் நாட்டரிசி 220 ரூபாவிற்கும் கீரி சம்பா 260 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்பட வேண்டுமென நிர்ணய விலை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களை கண்டறியும் நோக்கில் இன்று(26) முதல் சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக  அமைச்சர் நளின் பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.

Reported by :S.Kumara

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *